உலகம்

நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின் மீட்கப்பட்ட மூன்றாவது நபர்

நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின்னர் இருந்து மூன்றாவது நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையில் திடீர் கோர தாண்டவத்தால் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 5,600க்கும் மேற்பட்டோர் காணாமல் போன 10 நாட்களுக்குப் பின்னர், நேபாளத்தில் இன்று சனிக்கிழமையன்று ஒரு சீன நாட்டவர் சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரிசூலி ஆற்றில் உள்ள அதே நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்துதான் அந்த சீன நபர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் கூறியது. முந்தைய நாள் இதே சுரங்கப்பாதையில்தான் இரண்டு நேபாளியர்கள் ஒரு பரபரப்பான மீட்பு நடவடிக்கையில் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆற்றின் மேல் பகுதிகளில் ஆகஸ்ட் 26 அன்று ஒரு பனியாறு சரிந்ததால், ஆறு நீர்மின் திட்டங்கள் தொடர்பான சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் சிக்கியிருக்கலாம் என்று மீட்புப் பணியாளர்கள் நம்புவதாகக் கூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *