இந்தியா

கச்சத்தீவை மீட்குமாறு தேமு​திக வலியுறுத்து

மீனவர்​களின் பிரச்​சினைக்கு கச்​சத்​தீவை மீட்​பதே ஒரே தீர்வு என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வைக்கு வெளியே தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் செய்​தி​யாளர்​களிடம் கருத்து வெளியிடுகையில் இது தொடர்பில் கூறியவை வருமாறு ,

” மீனவர்​களின் பிரச்​சினை​களுக்கு நிரந்​தரத் தீர்வு காண கச்​சத்​தீவை மீட்​டெடுப்​பது ஒன்றே வழி.

கடலில் ரசாயனம் மற்​றும் எண்​ணெய் கலப்​ப​தைத் தடுத்​து, மீன் வளம் மற்​றும் மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்க வேண்​டும்.

மீன்​பிடித் தடைக்​காலம் மற்​றும் புயல் காலங்​களில் உரிய நிவாரணம் வழங்க வேண்​டும். டீசல் மானி​யத்தை உயர்த்த வேண்​டும்.

மீனவப் பெண்​களுக்​குச் சுய உதவிக்​குழுக்​கள் மூலம் மாற்று வரு​மானத்​துக்​கான வழி​வகைகளைச் செய்ய வேண்​டும். ஆவின் பால் பதப்​படுத்​தும் குளிரூட்​டும் நிலை​யத்தை வேப்​பூரைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு அமைக்க வேண்​டும்.” – எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button