12 ஆம் திகதிக்கு முன் நாமல் கைது?

எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமனவின் மக்கள் பேரணிக்கு முன்னதாக தன்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
அரசாங்கம் தற்போது பாரிய அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. 12ஆம் திகதி அனுராதபுரத்திற்கு திரளவிருக்கும் மக்கள் அலையை தடுப்பதற்காக தன்னை சிறையில் அடைக்கக் கூட அரசாங்கம் தயங்காது. தேர்தல் வெற்றிக்கு பின்னர் உடைகளை மாற்றும் அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல், தாம் ஒருபோதும் தமது அடையாளத்தையோ அல்லது பாரம்பரிய ஆடையையோ மாற்றிக்கொள்ளப் போவதில்லை. சிலர் வெற்றிபெறும்போது ஒரு ஆடையையும், தோற்கும்போது வேறு ஆடையையும் அணிகிறார்கள். மக்கள் எதிர்ப்பு வரும்போது வேறு விதமாக நடந்துகொள்கிறார்கள். ஆனால் நாங்கள் நேர்மையாக எங்களது அடையாளத்தைப் பாதுகாத்து அரசியல் செய்கிறோம். அதனால் எங்களது ஆடையை கழற்றுவது இலகுவான காரியம் அல்ல என்றார்.
![]()