கவிதைகள்
“பாடுவோம் பணிவோம் பக்கம் வருவான்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

நீலங்கொள் மேகத்தின் மயில் மீது
நீ வந்து காட்சிதா திருக் குமரா
ஆலத்தை உண்டவன் மடி அமர்ந்து
ஞானத்தை உரைத்தவன் நீ அல்லவா
வேலினை ஏந்திய திருக் குமரா
வெவ்வினை வேரறச் செய் குமரா
மாலது மருகனாய் ஆகி நின்றாய்
மாயைகள் அகன்றிடச் செய் குமரா
அசுரரின் ஆணவம் அடக்கி நின்றாய்
அவ்வைக்குத் தமிழை அள்ளிக் கொடுத்தாய்
முத்தமிழ் முழுதுமாய் ஆகி நின்றாய்
முருகா என்றதும் உருகி நிற்பாய்
வெற்றியைக் கொடுப்பான் வேல் முருகன்
வினைகளைக் களைவான் வேல் முருகன்
பக்தியைச் செலுத்தினால் அவன் வருவான்
பாடுவோம் பணிவோம் பக்கம் வருவான் !
![]()