இலங்கை

செம்மணிப் புதைகுழியில் மேலும் சோதனைக் குழிகள் அகழப்படுமா?

செம்மணி மனித புதைகுழி பகுதியில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் இடங்கள் குறித்து வழங்கப்பட்டால் மேலும் சோதனை குழிகள் தோண்டப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 54ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய அகழ்வில் புதிதாக மூன்று சோதனை குழிகள் தோண்டப்பட்டது. இதுவரை மொத்தமாக 14 குழிகள் தோண்டப்பட்டதுடன் அவற்றில் ஐந்தில் மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.மேலும் குழிகள் தோண்டுவது தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் இடங்கள் குறித்து வழங்கப்பட்டால் மேலும் சோதனை குழிகள் தோண்டப்படும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button