இலங்கை
துப்பாக்கிகளை கையாளத் தெரியாத ஆயிரக்கணக்கான சிறை அதிகாரிகள்!

இலங்கை சிறைச்சாலைகளில் பணியாற்றும் சுமார் 3069 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துப்பாக்கியை ஒருபோதும் தொட்டது கூட இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிப் பயிற்சி
தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025 ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையின்படி, கைதிகளுடன் தொடர்பில் இருக்கும் 3,069 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை எதுவிதமான துப்பாக்கிப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை.
கைதிகளை நிர்வகிப்பதற்கும் மற்ற முக்கிய நோக்கங்களை அடைவதற்கும் சிறைச்சாலை உத்தியோத்தர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிப்பது அவசியம் என்று தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகம் கூறுகிறது.
2018 முதல் 2025 வரை, கைதிகளுடன் தொடர்பில் இருக்கும் 2389 அதிகாரிகளுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை காட்டுகிறது.
![]()