ஈஸ்டர் தாக்குதல் சதி பின்னணியில் 2076 சான்றுப் பொருட்கள்! ஆரம்பமாகிறது அடுத்த கட்ட விசாரணை

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, 2076 சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணையின் போது வெடிகுண்டுகள், வெடிபொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களே இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த விசாரணைகள் நாளை(17.08.2026) முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், இங்கு, குற்றம் சாட்டப்பட்டவரின் 10 வாக்குமூலங்கள் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவுள்ளது.
எதிர் தரப்பு சாட்சிய விசாரணை
நௌஃபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பிரதான வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையிலேயே எதிர் தரப்பு சாட்சிய விசாரணை நாளை (17) முதல் தொடங்கவுள்ளது.
இதன்படி ஈஸ்டர் தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியதே இந்தக் குற்றவாளிகள் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும், மேலும் குற்றவாளிகள் மீது 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மராசிங்க உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன.
வழக்கமான நடைமுறையின்படி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்திருக்க வேண்டிய இந்த வழக்கு விசாரணை, தினசரி விசாரணைகளின் மூலம் குறுகிய காலத்தில் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது என அரசாங்க தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
![]()