சிறைச்சாலையின் காவலில் எடுக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் சூட்கேஸ்

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்திய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எடுத்துச் சென்ற சூட்கேஸ் சிறைச்சாலையின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி முன்னிலைப்படுத்தப்பட்ட றிலையில் அவர் ஒரு சூட்கேஸுடன் சென்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருந்தது.
இந்நிலையில், மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டிய செய்தித் தொடர்பாளர் மேலும், சிறைக்கு அழைத்துச் செல்லப்படும்போது பெண்களுக்குக் கைவிலங்கு இடப்படுவதில்லை எனவும், கூறியுள்ளார்.
மேலும், அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சட்டவிரோதமாக எதுவும் நடக்கவில்லை என்பதால் எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது அங்குனுகோலபெலெஸ்ஸ சிறையில் மற்ற சந்தேக நபர்களுடன் இருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையில், அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள பல கைதிகள் இஷாரா செவ்வந்தியைப் பற்றி அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிய வந்துள்ளது என்றும், இருப்பினும், இஷாரா செவ்வந்தி அதிகப் பேருடன் பழகாதவாறு சிறை நிர்வாகம் அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அங்குனுகோலபெலெஸ்ஸ சிறை தரப்பினர் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
![]()