இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கோட்டாபயவின் தலைவிதி செப்டம்பர் 22 இல் நிர்ணயம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த ரீட் (Writ) மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.

அதன்படி, இந்த மனுவை மேற்கொண்டு விசாரிப்பதா அல்லது ஆரம்பத்திலேயே நிராகரிப்பதா என்பது குறித்த உத்தரவை நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் திகதி வழங்கும்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் தங்களது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தனர்.

இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button