இலங்கை

மலையகத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின; மீண்டும் பேரனர்த்தம் ஏற்படுமா என அச்சம்?; நிலைமை மோசமடையும் அபாயம்

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக ஹட்டன் , கொட்டகலை , வட்டவளை , நாவலப்பிட்டி, கம்பளை, பேராதனை, கிதுல்கல,

எட்டியாந்தோட்டை, ருவான்வெல்ல, தெஹியோவிற்ற ஆகிய பிரதேசங்களி லேயே அதிகளவில் வெள்ள அனர்த்தங் களும் மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன.
இந்த பிரதேசங்களில் ஆறுகளும் ஓடை களும் பெருக்கெடுத்துள்ள நிலையில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்யும் கடும் மழையால் மகா வலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் அதனுடன் இணையும் கிளை ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளன. அத்துடன் களனி கங்கையின் நீர்மட்டமும் களுகங்கையில் நீர்மட்டமும் உயர்வ டைந்து அதனுடன் இணைந்த கிளை ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளன. இந் நிலையில் தாழ்நிலப் பிரதேசங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தன. இதனால் பல
நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ள னர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்ய கடும் மழையை தொடர்ந்து கினி கத்தேனை பிளக்வாட்டர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக லயன் குடியிருப்பொன்று வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில் அங்கு சிக்கியி ருந்த 24 குடும்பங்கள் இராணுவத்தினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அத்து டன் ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் தோட்டம், லொக்ஹில் தோட்டம், மேம் பீல்ட் தோட்டம் ஆகிய பிரதேசங்களிலும் மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்ததுடன் அவர்களும் இராணுவத்தினரால் மீட்கப் பட்டுள்ளனர். அத்துடன் கம்பனை, நாவ லப்பிட்டி உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் மீட்புக் குழுக்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மகாவலி கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ச் சியாக அதிகரித்து வருவதால் அந்த ஆறு களை அண்மித்த பகுதிகளில் தாழ்நில பிர தேசங்களில் பாரிய வெள்ள அனர்த்தங்கள் ஏற்படலாம் என்று ஏற்படக் கூடுமென நீ ர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆறுகளை அண்மித்த தாழ்நில பிரதேசங்களில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அறிவித் தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீ ர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளன. இதனால் அந்த தீர்த் தேக்கங்களின் வான்கதவுகளை திறக்கும் நிலை ஏற்பட்டால் அளர்த்த நிலைமை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

மண்சரிவு அனர்த்தங்கள் தொடரும் மழையுடன் கூடிய காலநிலை யால் பல பிரதேசங்களில் மண்சரிவு அனர்த் தங்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பா லான மண்சரிவுகள் பிரதான வீதிகளில் ஏற்பட்டுள்ளன. ஹட்டன் கண்டி விதி, ஹட்டன் கொழும்பு வீதி, மாத்தளைகண்டி வீதி, ஹட்டன் நவரெலியா வீதி, மஸ்கெ லியா-ஹட்டன் மற்றும் கொழும்பு கண்டி வீதி உள்ளிட்ட வீதிகளில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டிருந்ததுடன் அந்த வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன. அத்துடன் அந்த வீதிகளில் மேலும் சில இடங்களில் வீதி தாழிறங்கும் அபாயம் காணப்பட்டதால் அந்த பகுதியூடான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இதன்படி கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பிரதேசங்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய மலைநாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்ட பாட சாலைகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேராதனை பல்கலைக் கழக பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக அந்தப் பல்கலைக் கழகத்தின் கல்வி மற்றும் பரீட்சை நடவ டிக்கைகள் மறுஅறிவித்தல் வரை தற்கா லிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் மீட்புக் குழுக்கள் தற்போதை காலநிலை மேலும் தீவிர மடையலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அனர்த்த நிலைமைகள் அதிகரிக்கலாம் என் றும் இதனால் இராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக் கப்பட்டுள்ளன. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவி களை வழக்குவதற்காக அனர்த்த முகா மைத்துவ நிலையம் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button