இலங்கை

செம்மணியில் மீண்டும் இன்று முதல் அகழ்வு

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் அகழ்வு பணிகள் இன்றையதினம் மீண்டும் ஆரம்பமாகி இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ளது.

கடந்த ஜுலை 24ம் திகதியன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் சிறு இடைவெளியின் பின்னர் இன்று ஆரம்பமாகிறது.

மூன்றாம் கட்டத்தின் அகழ்வு பணிகள் 56 தினங்களுக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் 42 தினங்களின் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீதமாக மூன்றாம் கட்டத்தில் 14 தினங்கள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெறும் அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மற்றும் மருத்துவ பீட மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்கின்றனர்.

இதுவரை மொத்தமாக 479 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 479 மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மழை அங்கியை ஒத்த அங்கியுடன் இனங்காணப்பட்ட சிறுவரின் என்புக்கூடு அகழ்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button