இலங்கை

சிறைச்சாலைகளில் பெரும் உயிராபத்து; நாமல் கூறுகிறார்

இலங்கை சிறைச்சாலை கட்டமைப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளது உயிர்களுக்கு பாரிய ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளதாக

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் இடம் பெற்ற கலவரம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் இரண்டாவது தடவையாக இவ்வாறான கலவரம் சிறைச்சாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலையில் போதியளவு பாதுகாப்பு இல்லை என குற்றம் சுமத்தி நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை முன் வைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறைச்சாலை கட்டமைப்பின் சுமார் 43 ஆயிரம் கைதிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு தெளிவாகவே போதிய அளவு வசதிகள் கிடையாது என தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவர் இன்னமும் பதவியில் அமர்த்தப்படவில்லை தற்பொழுது பதில் சிறைச்சாலை ஆணையாளர் ஒருவரே கடமைகளை மேற்பார்வை செய்து வருகின்றார் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தேவைக்கு அமைய சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் ஒரு பொருத்தமான அதிகாரியை இதுவரையில் நியமிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சிறைச்சாலை கட்டமைப்பில் பாரிய சமூகப் பிரச்சினை காணப்படுகின்றது, சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பாரதூரமான அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளது எனவும் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறினால் இந்த நிலைமை பாரிய சமூகப் பிரச்சனையாக உருவெடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button