கனடாவில் ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்க்கு தண்டனை

கனடாவில் ஒன்றரை வயதான குழந்தையை கொன்ற தாய்க்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கனடாவின் ‘நியூ வெஸ்ட்மின்ஸ்டர்’ நகரில், 18 மாத பெண் குழந்தை ஒன்று சுயநினைவின்றி மீட்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்குழந்தையின் தாய்க்கு கொலைக் குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஜூலை 21 அன்று, அக்குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததை அடுத்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டதாக கொலை விசாரணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குழந்தையின் உயிரிழப்பிற்கு வழிவகுத்த நிகழ்வுகளைக் கண்டறிய புலனாய்வாளர்கள் இடைவிடாது பணியாற்றி வந்த நிலையில், குழந்தையின் தாயான கர்மா டைக் மீது சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மனித படுகொலை, கொடுங்காயம் விளைவித்தல், ஆயுதத்தால் தாக்குதல், உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கர்மா டைக் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தன் மீதான மனிதக் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, அவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
![]()