இலங்கை
ஆரத்தழுவி ஆறுதல் கூறிய ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகளை செம்மணி மனிதப் புதைகுழி பகுதிக்கு அழைத்து ஆரத்தழுவி ஆறுதல் கூறிய ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோவின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட பின்னர் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இருவரை அழைத்த ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் அகழ்வு நடைபெற்ற மயானத்திற்கு உள்ளே அழைத்து கலந்துரையாடினர்.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை பார்த்து கையெடுத்து கும்பிட்டதுடன் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் ஆரத்தழுவி கொண்டார்.
தொடர்ந்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டதுடன் மகஜரொன்றையும் பெற்றுக் கொண்டார்.
![]()