எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தினர் செம்மணிக்கு வருகின்றனர்

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளவற்றில் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் அதனை பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு வருகைதரவுள்ளனர்.
காணாமல் போனோர் பற்றிய அலுவலக சட்டத்தரணிகளால் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இது தொடர்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை உறுதிப்படுத்தினார்.
மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு செம்மணி மனித புதைகுழியை பார்வையிடுவதற்கான அனுமதியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
பார்வையிடுவதற்காக எத்தனை பேர் வருகிறார்கள் என்பது இதுவரை தெரியாது. திங்கட்கிழமை அது சம்பந்தமாக தெரியவரும். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வருகை தருவதற்காகவே விண்ணப்பித்திருப்பதாக தெரியவருகிறது. நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது – என்றார்.
![]()