இலங்கை

நெருக்கடி காலத்தில் நான் 4 ஆவது தேர்வு; பொறுப்பை ஏற்றேன் என்கிறார் ரணில்

நாடு நெருக்கடியான காலகட்டத்தில் இருந்த போது நாட்டை தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்க பலரும் மறுத்த நிலையிலேயே தான் அந்தப் பொறுப்பை ஏற்றேன் என்றும், அதுவரையில் ஆட்சிப் பொறுப்பை வழங்கும் நபர்களில் நான் முதல் தேர்வாக இருந்திருக்கக்கவில்லை. நான்காவது தேர்வாகத்தான் இருந்திருக்கலாம் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது.

கொழும்பில் தேசிய இளைஞர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ரீட் வித் ரணில்’ என்ற நிகழ்ச்சியில் 2022 நெருக்கடி காலத்தில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றமை தொடர்பில் இளைஞர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது,

அப்போது நான் எந்த வகையிலும் முதல் தேர்வாக இருக்கவில்லை; நான் அநேகமாக நான்காவது இடத்தில் இருந்திருக்கலாம். ஆனால் மற்றவர்கள் பொறுப்பேற்க விரும்பவில்லை. மற்ற அனைவரிடமும் கேட்கப்பட்டு அவர்கள் மறுத்த சூழ்நிலையில்தான் நான் உள்ளே வந்தேன். நான் நான் இந்த அரசியல் களத்தில் நீண்டகாலமாக இருந்து வருகிறேன், நாடு ஆபத்தில் இருக்கும்போது, அதற்கு உதவ வேண்டும். இதனால் நான் பொறுப்பேற்றேன். நிலைமையை சமாளிக்க முடியும் என்று நான் நினைத்தேன், நாம் முன்னோக்கிச் சென்று, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, அதனைச் சரிசெய்தோம்.

இதேபோன்று நீங்களும் இதற்காக எப்போதும் தயாராக இருக்க வேண்டும், அதனை நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் அதற்குத் தயாராக இல்லை என்றால், நீங்கள் இந்த விளையாட்டில் அரசியல் களத்தில் இருக்கக் கூடாது அவ்வளவுதான் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button