இலங்கை

மாத்தளை மனிதப் புதைகுழி மர்மம்..!; சித்திரவதை தடயங்களுடன் மீட்கப்பட்ட 155 எலும்புக்கூடுகள்

2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி (Mass Grave) தொடர்பான விடயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

2012 நவம்பரில் மருத்துவமனை கட்டுமானப் பணியின் போது, 1988-89 காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சுமார் 154-155 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

எலும்புக்கூடுகளில் கம்பி, ஆணி மற்றும் சங்கிலிகள் கட்டப்பட்டிருந்த அடையாளங்கள் இருந்தன, இவை கொடூரமான சித்திரவதைகளுக்குப் பின் கொல்லப்பட்டதற்கான சான்றுகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

அந்த காலகட்டத்தில் மாத்தளை பகுதியில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர்கள் குறித்தும், அரசு பயங்கரவாதம் குறித்தும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2013ல் அவருடைய கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நீதி கோரி நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மூலம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்து எலும்புக்கூடுகளுக்கும் டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தான் அன்று இராணுவ முகாம் இருந்துள்ளதாக நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச தான் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button