உலகம்

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் இந்த ஒப்பந்தம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்​தி​யா – இங்​கிலாந்து இடையிலான ஒருங்​கிணைந்த பொருளாதார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம் கடந்த ஆண்டு கையெழுத்​தானது.

இதேவேளை, “இந்த ஒப்பந்தம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும் எனவும் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை நடைமுறைக்கு வருவதன் மூலம், இரு நாட்டின் பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும் எனவும் பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையி​லான வர்த்தக ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம் இந்தியா​வின் 99% ஏற்​றுமதி பொருட்​கள் மீது விதிக்கப்படும் சுங்க வரி​கள் நீக்கப்பட உள்​ளன.

இதனால் இரு​ நாடு​களுக்​கு இடையி​லான வர்த்தகம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அதி​கரிக்​கும் என எதிர்பார்க்கப்படு​கின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button