இலங்கை

மாத்தளை புதைகுழிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்…!

2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரமாகத் தூண்டியுள்ளது.

இந்த மனிதப் புதைகுழிக்குக் காரணமான சம்பவங்கள் நடந்ததாகக் கருதப்படும் 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரையான காலப்பகுதியில், மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்சவே கடமையாற்றியுள்ளார்.

இந்த விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ மற்றும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் தொடர்புபடுத்தப்பட்டதன் விளைவாக, தடயவியல் மற்றும் ஆணைக்குழு விசாரணைகள் அனைத்தும் அரசியல் தலையீடுகளால் முடக்கப்பட்டன.

இந்த நிலையில், பல்லாண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மை என்னவென்று வெளிப்படுத்தப்படாமல் இருப்பது, நீதி கிடைக்கும் என்ற நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button