பலதும் பத்தும்

சுமார் 28 கோடி ரூபாய் சொத்துக்களை நண்பனுக்கு உயில் எழுதிய 19 வயது இளைஞன்!

சீனாவில் 19 வயதுடைய ‘லி’ என்ற இளைஞன், தனது மறைவிற்குப் பிறகு சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனது உயிர் நண்பருக்கு வழங்குமாறு உயில் எழுதி வைத்திருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

குறித்த இளைஞனின் பெற்றோர் விவாகரத்து செய்து பின்னர் தனித்தனியாக மறுமணம் செய்துகொண்ட நிலையில், குடும்பச் சூழ்நிலையே இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் தான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவருக்கு தனது சொத்துகள் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தையே உயிலில் தெளிவாகப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

19 வயது இளைஞன் 28 கோடி ரூபாய் சொத்துக்களை நண்பனுக்கு உயில் எழுதிய சம்பவம் சீன சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button