உலகம்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ‘ஹில்ஸ்பரோ சட்டம்’ அடுத்த வாரம் நிறைவேறுகிறது!

நீண்ட நாட்களாகத் தாமதிக்கப்பட்டு வந்த ‘ஹில்ஸ்பரோ சட்டம்’ (Hillsborough Law) கொண்டு வருவதற்கான சட்டமூலம், அடுத்த வாரம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்படவுள்ளது.

கோடைக்கால நாடாளுமன்ற விடுமுறைக்கு முன்னதாகவே இச்சட்டம் நாடாளுமன்றத்திற்குத் திரும்பக் கொண்டுவரப்படலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக ‘பொது அலுவலக சட்டமூலம்’ என்று அழைக்கப்படும் இந்தச் சட்டம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ (House of Commons) மூலம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வரும் இலையுதிர்காலத்திற்குள் முழுமையான சட்டமாக மாறுவதற்கு வழிவகுக்கும்.

பொது அமைப்புகளும் அதிகாரிகளும் தங்களின் கடமைகளின் போது உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தியோகபூர்வ “நேர்மை மற்றும் உண்மைத்தன்மைக்கான கடமையை” இந்தச் சட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button