பலதும் பத்தும்

இந்த காய்களை கட்டாயம் எடுத்துக்கோங்க; மாரடைப்பு அபாயத்தை குறைக்குமாம்

மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்கும் காய்கறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மாரடைப்பு

இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே பலரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே மாடைப்பு ஏற்பட்டது.

தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையாகும்.

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முக்கிய மற்றும் முதன்மையான காரணமாக பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் பொரித்த, ஜங்க் புட், ஃபாஸ்ட் புட் இவைகள் நாவிற்கு ருசியாக இருந்தாலும் ரத்த குழாய்களில் கொழுப்பாக படிந்துவிடுகின்றது.

இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, இறுதியில் உயிரை பறிக்கும் மாரடைப்பு அபாயம் ஏற்படுகின்றது. இந்நிலையில் மாரடைப்பின் அபாயத்தை குறைக்கும் காய்கறிகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மாரடைப்பின் அபாயத்தை குறைக்கும் காய்கள்

தக்காளி

தக்காளியில் ஐசோபீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ள நிலையில், ரத்தக்குழாய்களில் ஏற்படக்கூடிய அடைப்பினை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே இதனை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் உடலினுள் சென்று ரத்தக்குழாயை விரிவடையக் செய்து, ரத்த ஓட்டத்தினை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. எனவே பீட்ரூட்டை உணவில் சேர்த்தால் ரத்தக்குழாயில் உள்ள சிறுசிறு அடைப்புகள் நீங்குமாம்.

இந்த காய்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... மாரடைப்பு அபாயத்தை குறைக்குமாம் | These Vegetables Eat To Prevent Heart Attack

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள ஒருவிதமான அமிலம் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பினை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து ரத்த ஓட்டத்தினை அதிகரித்து மாரடைப்பினை தடுக்கின்றது. சின்னவெங்காயம், பெரியவெங்காயம் இரண்டும் உடலுக்கு அதிக நன்மையை அளிக்கின்றது.

கேரட்

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், இதிலுள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் ஆரோக்கியத்தினை அளிக்கின்றது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ரத்தக்குழாய் அடைப்பினை நீக்கி ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கின்றது. மாரடைப்பு, பக்கவாதத்திலிருந்தும் தடுக்கின்றது.

இந்த காய்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... மாரடைப்பு அபாயத்தை குறைக்குமாம் | These Vegetables Eat To Prevent Heart Attack

கீரைகள்

நார்ச்சத்து அதிகம் கொண்ட கீரையிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ள நிலையில், தேவையற்ற கொழுப்புகள், படிவுகள் அனைத்தையும் நீக்குகின்றது. மேலும் மலச்சிக்கலையும் தடுக்கின்றது. இரவு நேரத்தினை விட பகல் நேரத்திலேயே கீரையை சாப்பிடவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button