உலகம்

புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கியை ஆரம்பிக்க 09 நாடுகள் இணக்கம்

புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கிக்கு ஆதரவளிக்க 09 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அல்பேனியா, பெல்ஜியம், கிரீஸ், லாட்வியா, லக்சம்பர்க், ருமேனியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் அனைத்தும் தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவை பலதரப்பு பாதுகாப்பு, மற்றும் மீள்திறன் வங்கியின் (DSRB) ஆரம்பக் கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் வரையறுத்து, அதன் செயல்பாடுகளை வடிவமைக்கும் என்றும் கார்னி கூறினார்.

100 பில்லியன் பவுண்டுகள் (134 பில்லியன் டொலர்கள்) வரை மலிவான நிதியைத் திரட்டுவதன் மூலம் நட்பு நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இந்த வங்கியின் நோக்கமாகும் என கார்னி விளக்கியுள்ளார்.

இந்த ஆண்டு குறித்த வங்கியின் பொறுப்பை கனடா ஏற்றுக்கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button