பலதும் பத்தும்

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கால்நடை மேய்ப்பவர் ஒருவர் மீது சிங்கம் நடத்திய பயங்கரத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது;

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

பாலிதானா தாலுகாவில் உள்ள கர்ஜியா கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், உள்ளூர் மேய்ப்பவர் ஒருவரை சிங்கம் பாய்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அவரை மீட்க விரைந்து சென்றனர்.

அந்த வைரல் வீடியோவில், ஒரு சிங்கம் ஆடு-மாடு மேய்ப்பவர் ஒருவரைத் தரையில் அழுத்திப் பிடித்துக்கொண்டு, அங்கிருந்தவர்கள் அதை விரட்ட மேற்கொண்ட தீவிர முயற்சிகளையும் மீறி அவரை விடுவிக்க மறுப்பது பதிவாகியுள்ளது.

கிராம மக்கள் அலறும் சத்தம் கேட்பதுடன், பாதிக்கப்பட்டவரை விடுவிக்குமாறு சிங்கத்தின் மீது சிலர் கற்களை வீசுவதையும் காண முடிகிறது.

இந்த மோதலின்போது, ​​சிங்கம் அந்த மேய்ப்பவரின் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கடித்ததில் அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பல நிமிடப் பதற்றத்திற்குப் பின்னர், அந்தப சிங்கம் அந்த நபரை விடுவித்துவிட்டு, அங்கேயே விட்டுவிட்டு அருகில் இருந்த கால்நடைத் தொழுவத்தை நோக்கிச் சென்றுவிட்டதாக பாலிதானா வனப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தல் காயமடைந்த நபர் முதலில் பாலிதானாவில் உள்ள உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பவநகருக்கு மாற்றப்பட்டு சிகிச்சை ‍பெற்று வருகிறார்.

இந்ந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறைக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அந்த வனவிலங்கைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாலிதானா வனத்துறை அதிகாரி சிராக் அமின் தெரிவித்தார்.

மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் கார்ஜியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button