பாரிசில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

தமிழ் இலக்கிய உலகிற்கு மேலும் நான்கு புதிய படைப்புகளை அர்ப்பணிக்கும் சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது.
எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் “ஈழப் போரில் எழுத்தாயுதம்”, “போர்க் களத்தின் பேனாக்கள்”, “அரபு வசந்தம்”, “உக்ரேனிய போரும் ஊடக திரிபும்” ஆகிய நான்கு நூல்கள், 2026 செப்டம்பர் 5 ஆம் தேதி, சனிக்கிழமை, வாசகர்களின் கரங்களில் அதிகாரப்பூர்வமாக தவழவுள்ளன.
இந்த நிகழ்வு மாலை 5.00 மணி முதல் 57, Boulevard de Belleville, Paris 75011 என்ற முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும். மெட்ரோ: Couronnes (M2) / Belleville (M11).
இவ்விழாவிற்கு இலக்கிய ஆர்வலரும் எழுத்தாளருமான திரு. கே.பி. லோகதாஸ் அவர்கள் தலைமை தாங்குகிறார். பாரிசிலும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில், நூல்களின் உருவாக்கப் பின்னணி, அவற்றின் சிந்தனைப் பரப்பு மற்றும் நோக்கங்கள் குறித்து நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார்.
![]()