பலதும் பத்தும்

4,800 ஊழியர்கள் பணி நீக்கம்; மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 2.1 சதவீதம் பேர் அதாவது 4,800 பேரை பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.

ஏஐயில் கவனம் செலுத்தி வரும் தொழில் நுட்ப நிறுவனங்கள், அதற்கு அதிக செலவு ஆவதால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

4,800 ஊழியர்கள் பணி நீக்கம் ; மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு | Microsoft Lays Off 4 800 Employees

மெட்டா நிறுவனம் சமீபத்தில் 8 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருந்தது. அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பில் ஈடுபட்டது.

மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்த ஆண்டு துவக்கத்தில் 9 ஆயிரம் பேர் தாமாக முன்வந்து பணியில் இருந்து ஆகும் விலகும் வாய்ப்பை வழங்கி இருந்தது.

தற்போது, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. 2022ம் ஆண்டுக்கு பிறகு அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட மோசமான சரிவாக இது உள்ளது.

இந்நிலையில், 4,800 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button