கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படத்தை வைத்து செய்யப்பட்ட சடங்கு!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தின் மீது கூழாங்கற்களை வீசி, “சாத்தானைக் கல்லெறிதல்” என்ற குறியீட்டு சடங்கில் ஈடுப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீமையை நிராகரிப்பதைக் குறிக்கும் வகையில் ஹஜ் யாத்திரையின் போது சாத்தானைக் குறிக்கும் தூண்களின் மீது சிறிய கற்களை எறியும் வழக்கமான சடங்கைப் பின்பற்றி இந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெஹ்ரான் வீதிகளில் ஈரான் கொடிகளுடனும், மறைந்த முன்னாள் தலைவரின் புகைப்படங்களுடனும் பெருமளவிலான ஆண்களும் பெண்களும் தங்களது குழந்தைகளுடன் திரண்டுள்ளனர்.
படுகொலைக்கான பரிசுத்தொகை
அதன்போது, வீதிாயொரத்தில் நின்றிருந்த ஒரு பெண் ஒரு கையில் நாட்டின் கொடியையும், மறு கையில் டொனால்ட் ட்ரம்பின் முகம் அச்சிடப்பட்ட “தேடப்படும்” சுவரொட்டி போன்ற பதாகையையும் ஏந்தியிருந்தார்.
அந்தப் பதாகையில், அலி கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் ட்ரம்பை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ பிடித்துக் கொடுப்பவருக்கு 20,000,000 டொலர்கள் படுகொலைக்கான பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த இறுதி ஊர்வலத்தின் போது, கமேனியின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் என்று கருதப்படும் ட்ரம்பின் “போர் வெறி ஆலோசகர்கள்” அடங்கிய இலக்குகள் பட்டியலையும் அங்கு கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.
![]()