பலதும் பத்தும்

கண்ணீருடன் விடைபெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஸ்பெயின் அணி உடனான அதிர்ச்சித் தோல்வியின் மூலம் போர்த்துக்கல் அணி உலகக் கிண்ணம் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுகல் வெளியேறியதால், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற  உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் நாக்-அவுட் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டம்

தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் கடைசியில் கோல் அடித்ததால் ஸ்பெயின் அணி 0-1 கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். ஆட்டத்தின் பெரும்பகுதி ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

 

 

ஸ்பெயின் அணி வீரர்கள் தொடர்ந்து போர்த்துக்கல் கோல் போஸ்ட்டை நோக்கித் தாக்குதல் நடத்தினர்.

ஆட்டத்தின் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

போட்டி சமனில் முடிந்து கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90 + 1′) ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் மைக்கேல் மெரினோ (Mikel Merino) அசாத்தியமான ஒரு கோலை அடித்து ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிரவைத்தார்.

இந்த ஒரு கோலின் மூலம் ஸ்பெயின் அணி 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு நுழைந்தது.

உலகக் கோப்பை வாழ்க்கை முடிவுக்கு

போர்ச்சுகல் வெளியேறியதால், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை வாழ்க்கை முடிவுக்கு வந்தது

இந்த உலகக் கோப்பையே தனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று போட்டிக்கு முன்னதாகவே அறிவித்து இருந்தார்.

இறுதி விசில் ஒலித்ததைத் தொடர்ந்து, உணர்ச்சிவசப்பட்டு இருந்த ரொனால்டோ டல்லாஸ் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தவாறு கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்

“நான் எல்லாவற்றையும் கொடுத்தேன், என் சிறந்த பங்களிப்பை அளித்தேன், இப்போது மனசாட்சி உறுத்தாமல் விடைபெறுகிறேன்,”  “இதுதான் கால்பந்து, இதுதான் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கை. சில நேரங்களில் வெற்றி பெறுவோம், சில நேரங்களில் தோல்வியடைவோம்  என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button