இலங்கை

கடந்த அரசு போட்ட ஐ.எம்.எப். முடிச்சுக்குள் இந்த அரசு சிக்கியது; வாசுதேவ நாணயக்கார

சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தமென்ற அவிழ்க்க முடியாத முடிச்சுக்குள் இந்த அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தால் இந்த அரசாங்கம் பொறியில் சிக்கியது போலாகிவிட்டது. இது இந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டது. அல்ல. கடந்த அரசாங்கத்தினால் இந்த அரசாங்கத்தின் தொளில் தொங்கவிடப்பட்ட முடிச்சாகும். இந்த அரசாங்கம் டித்வா புயால் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது. இதற்காக 500 பில்லியன் ரூபாவை மேலதிகமாக வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்க வேண்டியேற்பட்டது. அத்துடன் டெங்கு தொற்று நிலைமை போன்றவற்றுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.

இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிக்களை நாங்கள் சாதகமான முறையில் பார்க்க வேண்டும். அத்துடன் அரசாங்கம் செய்யும் தவறுகளையும் நாங்கள் விமர்ச்சிக்க வேண்டும். அரசாங்கம் சிக்கியுள்ள சவால்கள் தொடர்பிலும் பேச வேண்டும். இதனை விடுத்து தமது பிரச்சினைகள் தொடர்பாக மட்டும் அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்தை மதிப்பிட முடியாது.

அரசாங்கம் தொடர்பில் பல்வேறு விமர்சகங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும், நாட்டில் குற்றக் கும்பல்களை கைது செய்து, ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை இந்த அரசாங்கம் கைது செய்கின்ற இந்த நேரத்தில் இந்த நடவடிக்கைகளை பாராட்டாமல் இருக்க முடியாது. அரசாங்கம் தொடர்பில் கூறக்கூடிய குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் அரசாங்கத்தின் நல்ல விடயங்களை குறிப்பிட வேண்டியுள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button