வட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை

வட்ஸ்அப் பயனர்களைக் குறிவைத்து பரவி வரும் ஆபத்தான மல்வேர் (Malware) சைபர் தாக்குதல் குறித்து மத்திய அரசின் அவசரகால கணினி கட்டுப்பாட்டுக் குழு எச்சரித்துள்ளது.
குறிப்பாக வட்ஸ்அப் மற்றும் டெஸ்க்ட்டொப் பயனர்களுக்கு, விஷுவல் பேசிக் ஸ்கிரிப்ட் அல்லது .vbs வடிவத்திலான தீங்கு விளைவிக்கும் மென்பொருள் கோப்புகள் அனுப்பப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது.
எனினும் ஒருவரது வட்ஸ்அப் கணக்கு ஹெக்கிங் செய்யப்பட்டால், அவரது கணக்கிலிருந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் எண்களுக்கு இந்த ஆபத்தான கோப்புகள் தானாகவே அனுப்பப்படுகின்றன. பழக்கப்பட்ட நபர் அனுப்புவதால், பலரும் இதை நம்பித் திறந்து ஏமாந்துவிடுகின்றனர் என காஸ்பர்ஸ்கி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன்,இந்தக் கோப்புகளைத் திறக்கும்போது, ஹெக்கிங் செய்பவர்களுக்கு கணினி அல்லது மொபைலின் தொலைநிலை அணுகல் கிடைத்துவிடுகிறது. இதன் மூலம் சாதனத்திலுள்ள தரவுகள் திருடப்படலாம், இதை பயனர் உளவு பார்க்கப்படலாம் அல்லது நெட்வொர்க்கில் உள்ள பிற கணினிகளுக்கும் இந்த மால்வேர் (Malware)பரவக்கூடும்.
மேலும்,நன்கு தெரிந்தவர்களிடம் இருந்து (PDF) அல்லது ஆவணங்கள் வந்தாலும், குறிப்பாக அவை .vbs கோப்புகளாக இருந்தால், அவற்றை அனுப்பியவரைத் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் தொடர்புகொண்டு உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகே திறக்க வேண்டும்.
இந்நிலையில்,உங்கள் வட்ஸ்அப் செயலியை எப்போதும் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து வைத்திருங்கள்.
அத்துடன், வட்ஸ்அப் கணக்கில் உடனடியாக இரு காரணி அங்கீகாரத்தை செயல்படுத்துங்கள்.
![]()