அரிசிப் பானைகளை எடுத்துச் செலலும் கட்டாயத்திற்கு அரசாங்கம்!; விமர்சிக்கும் நாமல்

அரசாங்க ஊழியர்களுக்கு கடனாக அரிசி வழங்கப்பட்ட பின்னர், கடன் தொகை செலுத்தப்படாவிட்டால், அரசாங்கமே சென்று அரிசிப் பானைகளை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட நாமல், “ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்து வாழ்க்கைச் செலவு குறித்துப் பேசுவார் என்றும், பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான திட்டம் குறித்துப் பேசுவார் என்றும் நாங்கள் எதிர்பார்த்தோம்.ஆனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்து ஒரு காவல்துறை ஊடகப் பேச்சாளரின் வேலையைச் செய்தார்.
அதிகபட்ச நிவாரணம்
இப்போது அந்த மனிதர், பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமர்ந்துகொண்டு, ‘இப்போது என்ன சொல்லப் போகிறேன்?’ என்று யோசித்துக்கொண்டிருக்க வேண்டும். அரசாங்க ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசியைக் கடனாக வழங்குவதுதான் அளிக்கக்கூடிய அதிகபட்ச நிவாரணம்.
இப்போது, கடன் தொகை செலுத்தப்படாவிட்டால், அரசாங்கமே சென்று அரிசிப் பானைகளை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். எவ்வாறாயினும், அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து அரிசிப் பானைகளை எடுத்துச் செல்வதற்குப் பழக்கப்பட்டவர்கள்.” என்றார்.
![]()