உலகம்

கூரை இடிந்து விழுந்து 14 சிறுவர்கள் பலி: பாகிஸ்தானில் சோகம்

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகே கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில், அதற்குள் சிக்கி 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் (Kahna) உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் (Tuition Centre) இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர்.

இந்தக் கட்டிட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு நேரப்படி மாலை 16:45 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக மீட்புப் பணி 1 அவசரக்கால சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மீட்புப் பணிகள் ஒரு மணி நேரத்திற்குள் நிறைவடைந்ததாகவும், மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார். மேலும் ஐந்து பேர் காயமடைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்தச் செய்தியில், ஷாபாஸ் ஷெரீப் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்ததோடு, அவர்களுக்கு சாத்தியமான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button