உலகம்

பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுச் செயற்பாடுகளுக்கு எதிரான வீடியோ மற்றும் முக்கிய ஆதாரங்களைச் சமர்ப்பித்து, அந்நாட்டை மீண்டும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) ‘கிரே பட்டியலில்’ (Grey List) சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள FATF மாநாட்டில், பாகிஸ்தான் தனது நிலப்பரப்பில் பயங்கரவாதக் குழுக்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதையும், நிதி அமைப்புகளைப் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதையும் ஆதாரங்களுடன் இந்தியா சுட்டிக்காட்டவுள்ளது.

கடந்த ஒக்டோபர் 2022-ல் 34 அம்சங்களைக் கொண்ட செயல் திட்டத்தை நிறைவேற்றியதாகக் கூறி பாகிஸ்தான் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது

ஆனால், சமீபத்திய ‘Operation Sindoor’ நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் பாகிஸ்தான் இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றதைச் சமூக வலைத்தளங்களில் வெளியான ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த ஆதாரங்களை முன்வைத்து, பாகிஸ்தானுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button