பலதும் பத்தும்

சென்னையில் இருந்து திருப்பதிக்கு புல்லட் ரயில் – பணிகள் தொடக்கம்

சென்னையில் இருந்து புல்லட் ரயில் மூலமாக திருப்பதி செல்லும் வழித்தடத்திற்கான DPR பணிகள் நடைபெற்று வருகிறது.

திருப்பதிக்கு சென்னையில் இருந்து புல்லட் ரயில்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் வழித்தடமான மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான 2029 ஆம் ஆண்டில் புல்லட் ரயிலை சேவையை தொடங்கும் நோக்கில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதே போல், சென்னை – பெங்களூரு இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு புல்லட் ரயில் - பணிகள் தொடக்கம் | Chennai People Can Go To Tirupati By Bullet Train

மேலும், சென்னை – அமராவதி – ஹைதராபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

760.09 கி.மீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில், ஆந்திரப் பிரதேசம் 518.54 கி.மீ, தெலங்கானா 180.32 கி.மீ மற்றும் தமிழ்நாடு 61.23 கி.மீ பகுதியையும் கொண்டிருக்கும்.

இதில், சித்தூருக்கும் திருப்பதிக்கும் இடையே 65 கி.மீ நீளமுள்ள தனி இணைப்பு வழித்தடம் ஒன்றும் பரிசீலனையில் உள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு புல்லட் ரயில் - பணிகள் தொடக்கம் | Chennai People Can Go To Tirupati By Bullet Train

இதற்கான இறுதி இட ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கைக்கு(DPR) என்.எச்.எஸ்.ஆர்.சி.எல் (NHSRCL) ஒப்புதல் அளித்துள்ளது. அறிக்கை தயாரானதும், இறுதி ஒப்புதலுக்காக மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.

முன்மொழியப்பட்ட இந்த சித்தூர் – திருப்பதி இணைப்பு, ஹைதராபாத்-அமராவதி-சென்னை வழித்தடத்தை, சென்னை-பெங்களூரு வழித்தடத்துடன் இணைக்கும். 

இதன்மூலம் பயணிகள் பெங்களூருவிலிருந்து சித்தூர் மற்றும் திருப்பதி வழியாக அமராவதிக்கு புல்லட் ரயிலில் தடையின்றி பயணிக்க முடியும்.

முன்மொழியப்பட்ட இந்த வழித்தடத்தில், அமராவதி, குண்டூர், நெல்லூர், திருப்பதி என ஆந்திராவில் 10 நிறுத்தங்களும், தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை வெளிவட்டச் சாலையில் மிஞ்சூர் என 2 நிறுத்தங்களும், தெலங்கானாவில் 6 நிறுத்தங்களும் என மொத்தம் 18 நிறுத்தங்கள் உள்ளன.

இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது 12 மணி நேர பயண தூரம், 2;20 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், திருப்பதி இந்திய அளவில் பிரபலமான ஆன்மீக தலமாக உள்ளதால், சென்னை, பெங்களூரு, அமராவதி, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு புல்லட் ரயிலில் பயணிக்க முடியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button