பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா: 68 ,000 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை;1,430 பேர் பலி

வெனிசுலாவின் காரகாஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைத் புதன்கிழமை மாலை தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1430-ஐத் தாண்டியுள்ளதாக ‘யூரோ நியூஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட இரண்டு நாட்களாகியும் வெளிநாட்டு மீட்புக் குழுவினரும் உதவிகளும் இப்போதுதான் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடையத் தொடங்கியுள்ளன. இதனால், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்ற வெனிசுலா மக்களும் மீட்புக் குழுவினரும் வெள்ளிக்கிழமை தீவிரமாகப் போராடினர்.
அரசாங்கத் தரப்பின்படி, இன்னும் 172 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர், 1430 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,360 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 50,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகலிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் தலைநகர் காரகாஸ் மற்றும் அருகிலுள்ள மரக்காய் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.
மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா மாநிலம் உள்ளிட்ட சில பகுதிகளில், நிவாரணப் பணிகள் சீராக நடக்காததால் மக்கள் மத்தியில் ஏமாற்றமும் விரக்தியும் அதிகரித்துள்ளது. கனரக உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் அதிகாரிகளின் போதிய வருகை இல்லாததால், அப்பகுதி மக்களும் தன்னார்வலர்களும் இன்னும் வெறும் கைகளாலேயே இடிபாடுகளைத் தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.
லா குவைரா நகரின் எட்டு அடுக்குமாடிகளைக் கொண்ட ‘ஹியூகோ சாவேஸ்’ குடியிருப்பு வளாகத்தில் தனது 6 வயது மகன் மற்றும் ஐந்து உறவினர்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக 25 வயதான ஜெனிபர் பாலாசியோஸ் தெரிவித்தார்.
“அப்பகுதி மக்களே சேர்ந்துதான் இதுவரை பலரை உயிருடன் மீட்டுள்ளனர்,” என்று கூறிய அவர், “இடிந்து விழுந்த கொங்கிரீட் தூண்களை அகற்றுவதற்கு கிரேன் போன்ற கனரக வாகனங்களைக் கொண்டு வர வேண்டும். இன்னும் பலர் உள்ளே உயிருடன் சிக்கியிருக்கிறார்கள்,” என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
![]()