புதிய சக்தி நாட்டில் தோற்றம்பெறாது; NPP ஆட்சி தொடரும்: வாசுதேவ ஆதரவுக்குரல்

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சட்டம் சிறப்பான முறையில் அமுலாகிவருகின்றது” – என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ நாட்டில் சட்டம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது.
குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கம் பின்னடிக்கவில்லை.
சுரேஷ் சலே விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளனர். அவர் உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபடுவது தவறு. ஏனெனில் உடல் பலவீனமடைந்தால் வழக்கு விசாரணையை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாத நிலை அவருக்கு ஏற்படும்.
அதேபோல மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. எனவே, புதிய சக்தி நாட்டில் தோற்றம்பெறாது. இந்த சக்தி தொடரும் என நம்புகின்றேன்.” – என்றார் வாசுதேவ நாணயக்கார.
![]()