இலங்கை

பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தமது பூர்வீகக்காணிகளில் இராணுவம் பயன்களைப்பெற்று வருவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாற்றுக்காணிகளை தாம் ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது எனவும் தாம் அப்படி எந்த மாற்றுக் காணிகளையும் ஏற்கப் போவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

171 ஏக்கர் காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தின் 59 ஆவது காலால்படைப்பிரிவினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இன்றிலிருந்து தொடர் போராட்டமாக இந்தப் போராட்டத்தினை தாம் முன்னெடுக்க போவதாக மக்கள் தெரிவிப்பதுடன் கேப்பாப்பிலவு ராணுவ முகாமிற்கு முன்பாக அடையாள உண்ணாவிரதத்தில் தொடர்ந்து ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர் இன்றைய போராட்டத்தில் சுமார் 30 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button