இலங்கை

யாழில் முடக்கப்பட்ட பல கோடி சொத்துக்கள்!; அடுத்தது பிள்ளையான் – இனியபாரதி

போதைப்பொருள் கடத்தல், வன்முறை மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் மூலம் சொத்துக்களைச் சேர்த்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

லஞ்ச ஊழல் ஆணைகுழுவினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் இவ்வாறான விசாரணைகள் நடைபெறுகின்றன.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜீவ் என்பவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான் ) மற்றும் இனியபாரதி ஆகியோரின் சொத்துக்களும் விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாரேனும் மிரட்டிப் பணம் பறிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருந்தாலோ, அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button