பலதும் பத்தும்

பங்களாதேஷை வெள்ளையடித்த அவுஸ்திரேலியா

மூன்றாவது மற்றும் இறுதியுமான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஸ்பென்சர் ஜோன்சனின் வரலாற்றுச் சிறப்புமிக்க பந்துவீச்சும், அணித்தலைவர் மிற்செல் மாஷின் அசுரத்தனமான துடுப்பாட்டமும் இந்த வெற்றிக்குத் தூண்களாக அமைந்தன.

ஜோன்சனின் வேகத்தில் நிலைகுலைந்த பங்களாதேஷ்

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷுக்கு அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலிருந்தே சிம்ம சொப்பனமாக விளங்கினர். குறிப்பாக, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜோன்சன் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் ஓவரொன்றுக்கு மிகவும் குறைவான ஓட்டங்கள் கொண்ட 4 ஓவர்களை வீசி சாதனை படைத்தார் (4-0-6-2).

பவர்பிளே சறுக்கல்:

ஜோன்சன் வீசிய பந்தில் சைப் ஹசன் அடித்த பந்தானது, ஜோசனின் விரலில் பட்டு மறு முனையில் இருந்த விக்கெட்டைத் தாக்க, தன்ஸிட் ஹஸன் ரன் அவுட்டானார்.

அடுத்த பந்திலேயே சைப் ஹசனை விக்கெட் எடுத்து அவுஸ்திரேலியாவுக்கு இரட்டைப் பரிசளித்தார் ஜான்சன்.

நாதன் எலிஸ் மற்றும் அடம் ஸாம்பா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷை தடுமாற வைத்தனர்.

ஸாம்பாவின் மைற்கல்: எட்டாவது ஓவரில் நுருல் ஹஸனை தனது கூக்ளி பந்துவீச்சில் போல்ட் ஆக்கிய சுழற்பந்து வீச்சாளர் ஸாம்பா, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 350ஆவது விக்கெட்டை வீழ்த்தி வரலாற்று மைல்கல்லை எட்டினார்.

பங்களாதேஷின் தற்காலிக அணித்தலைவர் தெளஹித் ஹிரிடோய் ஒற்றை ஆளாகப் போராடி 3 ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 61 (51) ஓட்டங்களைப் பெற, அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

மாஷின் ருத்ரதாண்டவம்! 9 ஓவர்கள் மீதமிருக்கையில் அதிரடி வெற்றி!

110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு, அணித்தலைவர் மிற்செல் மார்ஷ் அதிரடி துடுப்பாட்டம் மூலம் வெற்றியை எளிதாக்கினார்.

முதல் ஓவரிலேயே அதிரடி: ஷொரிபுல் இஸ்லாம் வீசிய முதல் ஓவரிலேயே மாஷ் மற்றும் ஜொஷ் இங்கிலிஸ் தலா இரண்டு நான்கு ஓட்டங்களை விளாசி 17 ரன்களைக் குவித்தனர்.

வேகப்பந்துவீச்சாளர்கள் காலி: பங்களாதேஷின் அதிவேக பந்துவீச்சாளரான நஹித் ரானாவின் ஓவரில் ஒரு ஆறு ஓட்டங்கள் மற்றும் இரண்டு நான்கு ஓட்டங்களைப் பறக்கவிட்டு மாஷ் அதிரடி காட்டினார். அந்த ஓவரில் மட்டும் அவுஸ்திரேலியா 20 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலிஸ் 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாலும், மாஷ் வெறும் 28 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்களுடன் 60 ஓட்டங்கள்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் டிம் டேவிட் அடுத்தடுத்து இரண்டு ஆறு ஓட்டங்களைப் பறக்கவிட, அவுஸ்திரேலிய அணி 11 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button