உலகம்

நான் சொல்வதை இஸ்ரேல் செய்கிறார்கள் ; போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ட்ரம்பின் கருத்து

இஸ்ரேலின் நடவடிக்கைகளில் தன்னால் செல்வாக்கு செலுத்த முடியும், நான் சொல்வதை அவர்கள் செய்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாவது:

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவதைத் தன்னால் தடுக்க முடியும். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான பரஸ்பர மரியாதையின் காரணமாகவே இஸ்ரேலியத் தலைமை தனது வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது.

இஸ்ரேலின் நடவடிக்கைகளில் தன்னால் செல்வாக்கு செலுத்த முடியும். அவர்கள் என் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள், நான் சொல்வதை அவர்கள் செய்கிறார்கள்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் வலுவான உறவு உள்ளது. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த தெற்கு லெபனானில் நடந்த கடுமையான சண்டையை நிறுத்த இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்ட வேளையில், ட்ரம்ப் கருத்து தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button