உலகம்

உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலா? ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து முழுமையாகத் திறக்கப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளின்படி, இந்த நடவடிக்கை பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைமைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 32 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் மூடல், சர்வதேச எரிசக்தி சந்தைகளிலும் கடல்சார் வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும், இந்த விடயம் தொடர்பாக ஈரான் அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button