உலகம்

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

பிரிட்டனின் பெட்ஃபோர்ட் (Bedford) நகருக்கு அருகே இரண்டு பயணிகள் இரயில்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 89 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக கிழக்கு இங்கிலாந்து ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ‘ அவசரப் பேரழிவு நிலைமை’ பிரகடனப்படுத்தப்பட்டு, மீட்புப் படையினர் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றனர்.

நேற்று மாலை 5 மணியளவில் கோர்பி (Corby) நகரிலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் ஒன்று, அதே ரயில் பாதையில் லண்டன் செயின்ட் பான்க்ராஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த நாட்டிங்ஹாம் ரயில் சேவையின் பின்புறத்தில் மோதியுள்ளது.

இந்த மோதலின் தாக்கத்தால், ரயிலின் ஒரு பெட்டி முற்றிலும் தடம் புரண்டு சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் 11 பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ‘மிகக் கடுமையான’ காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், 22 பயணிகள் கடுமையான எலும்பு முறிவுகள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன்
56 பேருக்குச் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button