உலகம்

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்களுக்கு மத்தியில், கடந்த மே மாதத்தில் இங்கிலாந்து எதிர்பார்த்ததை விட அதிகமாக 23.3 பில்லியன் பவுண்டுகளைக் கடனாகப் பெற்றுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இது, தொழிலாளர் கட்சியின் (Labour Party) தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்றால் அவர் எதிர்கொள்ளவிருக்கும் நிதி நெருக்கடிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் பர்ன்ஹாம் வெற்றி பெற்ற சிறிது நேரத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில் தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) இங்கிலாந்தின் கடன் பெறல் தொடர்பான இந்த தகவலை வெளியிட்டது.

அதில், 2026 மே மாதத்திற்கான பொதுத்துறை நிகரக் கடன், இதுவரை பதிவான எந்தவொரு மே மாதத்திலும் இல்லாத அளவிலான இரண்டாவது மிக உயர்ந்த தொகையாக இருந்தாக சுட்டிக்காட்டியது.

மத்திய கிழக்கு மோதலுக்கு நிதிச் சந்தைகள் எதிர்வினையாற்றியதால் கடன் வட்டிச் செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்த நிலையில், 2026 மார்ச் மாதத்தில் ரேச்சல் ரீவ்ஸின் வசந்தகால அறிக்கையுடன் வெளியிடப்பட்ட கணிப்பை விடக் கடன் வாங்கும் அளவு 5.6 பில்லியன் பவுண்டுகள் கூடுதலாக இருந்தது.

2026 ஏப்ரல் மாதத்தில் திருத்தப்பட்ட 23 பில்லியன் பவுண்டுகள் அளவிலிருந்து குறைந்து, 18.5 பில்லியன் பவுண்டுகள் என்ற மிகக் குறைந்த அளவிலேயே கடன் இருக்கும் என்ற பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button