பலதும் பத்தும்

கோழி வன்புண​ர்வு: 3 ஆண்டுகள் சிறை

வளர்ப்பு ஆடு, மாடு மற்றும் பறவைகள் போன்ற விலங்கினங்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு மிகக் கடுமையான சட்டங்கள் பிரிட்டனில் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி ஒன்றைப் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், அங்கு வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

இந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பிரிட்டனின் முக்கிய நகரமொன்றில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டு பிரிட்டனில் வசித்துவரும் குறித்த நபர், தனது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கோழி ஒன்றை யாரும் இல்லாத வேளையில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதில் மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அவர் அந்த வன்கொடுமைச் செயலைத் தனது மொபைல் போன் மூலம் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

பின்னர், அவரது மனைவி தற்செயலாக அவரது மொபைல் போனைப் பரிசோதித்தபோது, அதில் இருந்த அந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவைக் கண்டு உறைந்துபோனார். உடனடியாக இக்கோரச் சம்பவம் குறித்து அவர் உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.

மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட பிரிட்டன் பொலிஸார், விலங்கு வதை மற்றும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களின் கீழ் அந்த நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, விலங்கினங்கள் மற்றும் பறவைகளுக்கு எதிராக இழைக்கப்படும் இத்தகைய கொடூரமான செயல்களை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கடுமையான கண்டனம் தெரிவித்தார். அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானிய நபருக்கு 3 ஆண்டுகள் தடுத்து வைக்கக்கூடிய சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டார்.

இணையத்தில் பரவிவரும் இச்செய்தி, வளர்ப்புப் பிராணிகள் மீதான மனிதர்களின் இத்தகைய வக்கிரமான போக்கை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button