உலகம்

மத்திய கிழக்கு போரினால் மக்கள் கொடூர விலைய செலுத்த நேரிட்டுள்ளது

மத்திய கிழக்கு போரினால் மக்கள் ‘கொடூர விலைய செலுத்த நேரிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ், மத்திய கிழக்கு பிராந்தியம் ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருவதாக கவலை தெரிவித்தார்.

இந்த வாரம் நடந்துள்ள தொடர் தாக்குதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள், பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போரைத் தூண்டக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இந்தப் போரின் பாதிப்புகள் வெறும் பிராந்திய எல்லைகளுடன் நின்றுவிடாமல், கண்டங்கள் கடந்து எதிரொலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அரசியல் பதற்றங்கள், மக்கள் இடப்பெயர்வு மற்றும் பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்துள்ளன.

சர்வதேச சந்தைகள், வர்த்தகப் பாதைகள், உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றில் இந்தப் போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்திய மக்கள் ஒரு கொடூரமான விலையை கொடுத்து வருகின்றனர்.

இதன் பாதிப்பு ஒட்டுமொத்த உலகிற்கும், குறிப்பாக நலிவடைந்த நாடுகள் மற்றும் சமூகங்களுக்கும் பரவி வருகிறது என குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, சர்வதேச அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரும் உடனடியாக வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button