இலங்கை

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை; முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

தமிழ் நாட்டில் பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

அதோடு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும்” என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை; முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை | Tamilnadu Cm Vijay Launch Singappen Special Force

 குழந்​தைகள், பெண்​களின் பாதுகாப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்படை

தமிழ் நாட்டில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் திகதி முதலமைச்சராக பதவி​யேற்​றுக் கொண்​டார். அப்போது, குழந்​தைகள், பெண்​களின் பாதுகாப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்த அவர், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே அதுதொடர்​பான கோப்​பில் கையெழுத்திட்​டார்.

 

தொடர்ந்​து, அதிரடிப்படை​யின் ஐ.ஜி.​யாக பவானீஸ்​வரி நியமிக்​கப்​பட்​டார். இந்த படை​யில் மேலும், ஒரு எஸ்​.பி. 2 டிஎஸ்​பி, மற்​றும் 4 ஆய்​வாளர்​கள் உட்பட 30-க்கும் மேற்​பட்ட போலீ​ஸார் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

 

சிங்​கப்​பெண் அதிரடிப் படை​யில் இடம்​பெறும் பெண் போலீ​ஸார் மற்​றும் பெண் எஸ்​.ஐ.களுக்கு நேவி ப்ளூ நிற சட்டை – காக்கி பேன்ட் என்ற சிறப்பு சீருடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்நிலையில், சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்​டத்தை முதல்​வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button