இலங்கை

சுரேஸ் சலேவின் போராட்டத்தில் நாமல் தலைமறைவு – கலக்கத்தில் பலர்!

சிஐடி காவலில் உள்ள சுரேஸ் சலே, தனக்கு மனிதாபிமானமற்ற மற்றும் அநாகரிகமான முறையில் சித்திரவதைகள் நடத்தப்படுவதாகக் கூறி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதனை அவரது மனைவி மனோரி சலே மற்றும் மகன் உள்ளிட்டவர்கள் இதனை ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து உணவை மறுத்ததால் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் சுரேஷ் சலேயின் கைதுடன் அடுத்த கட்டத்திற்கு நகர்வதால், கோட்டாபய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button