இலங்கை

2029ஆம் ஆண்டிலும் அநுரவே ஜனாதிபதி; அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு

இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ரோமேஷ் தரங்க வீசும் ஈட்டியைப் போல மிகவும் துல்லியமாகவும், இலக்கு மாறாமலும் 2029ஆம் ஆண்டிலும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்கவே மீண்டும் பதவியேற்பார் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது மக்களின் நம்பிக்கையை வென்ற, பலமான மக்கள் ஆணையைப் பெற்ற அரசாங்கம் என வலியுறுத்தயுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடையும் என சில தரப்பினர் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடாளுமன்றப் போர்ச் சூழல் காரணமாக, எரிசக்தி விநியோகத்தில் சவால்களையும் கப்பல் போக்குவரத்து கட்டண உயர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக நிர்வகித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 7 பில்லியன் டொலராகப் பேணுவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும், உலக வங்கி மூலமாக தற்போதும் நிதி கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் டொலரின் மதிப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், அதனை முன்கூட்டியே வாங்குவதற்கு ஏற்பட்டுள்ள கேள்வி மற்றும் தேவையை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு தற்காலிக நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, தனிநபர் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் தீர்வை வரியை மூன்று மாத காலத்திற்கு உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொலரின் மதிப்பு 350 ரூபாயைத் தாண்டிவிடும் என்று சில வங்கிகளும் தனிநபர்களும் வதந்திகளைப் பரப்பி வந்த போதிலும், தற்போது டொலரின் மதிப்பு 340 – 345 ரூபா என்ற அளவில் ஸ்திரமாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர் மதிப்பு உயர்வதால் அரசாங்கங்கள் வீழ்ந்துவிடாது. அரசாங்கம் தேவையான தகுந்த நடவடிக்கைகளை எடுத்து பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று கனவு காணும் ஏனைய அரசியல்வாதிகள், முதலில் அத்தகைய கனவுகளைக் காண்பதற்கு முன்பாக தங்களுக்குள் ஒன்றிணைந்து இருக்க பழக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களை அதிகரிப்பதன் ஊடாக நாட்டிற்குள் வரும் டொலரின் அளவை மேலும் உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button