பலதும் பத்தும்
இலங்கை வந்தார் யோகி பாபு

இந்தியத் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, புதிய திரைப்படமொன்றின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்தடைந்துள்ளார்.
இலங்கையில் படமாக்கப்பட்டு வரும் புதிய தமிழ்த் திரைப்படம் ஒன்றின் முக்கிய காட்சிகளில் நடிப்பதற்காகவே அவர் இங்கு வருகை தந்துள்ளார். இதற்காக, இன்று அவர் கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த நடிகர் யோகி பாபுவை, படக்குழுவினரும் ரசிகர்களும் மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.



![]()