இலங்கை

38 வருடங்கள் நாட்டுக்காக வாழ்ந்தவர் சுரேஷ் சலே; சாகும் வரையிலான போராட்டத்தில் உறுதியாக உள்ளார்! – மனைவி தெரிவிப்பு

முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து சேவை செய்துள்ளாரெனவும், அதற்காக மக்கள் தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளதெனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுரேஷ் சலேயைப் பார்ப்பதற்காக  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வந்திருந்த போதே அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு தனது கணவரிடம் கூறிய போதிலும், அவர் அதனை ஏற்கத் தயாராக இல்லை எனவும், தனக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர் தொடர்ந்து குரல் கொடுப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதும் ஒரு சந்தேகநபர் மட்டுமேயான சுரேஷ் சலே மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாகவும், அதில் எந்தவொரு நீதியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயைப் பார்ப்பதற்காக இன்று (07) அவரது மனைவி, மகன் மற்றும் சகோதரர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button